பகுத்தறிவு அரசியல்:
ஒரு ஊரில் ஒரு தொழிற்சாலை தொடங்கப்படுகிறது . அந்த தொழிற்சாலையில் வேலை செய்ய ஆட்கள் வருகிறார்கள்.
தொழிற்சாலை நகரத்திலிருந்து வெகு தூரம் உள்ளதால் அந்த தொழிற்சாலை அருகில் இருக்கும் ஒரு வீட்டில் paying guest ஆக தங்கி வேலை செய்கிறார்கள் .
தொழிற்சாலை பெறுக பெறுக நிறைய வேலை ஆட்கள் வருகிறார்கள் .
அந்த paying guest வீட்டின் உரிமையாளர், அந்த வீட்டை ஒரு மேன்ஷன் ஆக மாற்றி அனைவருக்கும் வாடகைக்கு விடுகிறார் .
தனது வீட்டிலிருந்தே தனது மேன்ஷனில் தங்கி இருக்கும் தொழிலாளர்களுக்கு உணவும் சமைத்து போடுகிறார் .
வெவ்வேறு மாவட்டங்களிலிருந்த்து வேலை செய்ய வந்துள்ளவர்களுக்கு, வேலை செய்யும் இடத்தின் அருகிலேயே தங்குவதற்கு இடமும் கிடைத்து வீட்டு உணவும் கிடைத்தால் மகிழ்ச்சி தானே.
உணவு ருசி முன்னும் பின்னுமாய்த்தான் இருக்கும், அதேபோல், சாப்பிட்ட உணவிற்கு பணமும் முன்னும் பின்னுமாய் தரலாம், இலவசமாய் சாம்பார் வாங்கிச்சென்று அறையில் அரிசி சமைத்தும் சிலர் உண்ணுவார்கள், மொத்தத்தில் மிகவும் convenient ஆக இருக்கும்.
இரண்டு, மூன்று தொழிலாளர்களில் ஆரம்பித்து இன்றோ ஆயிரம் பேருக்கு மேல் அந்த தொழிற்சாலையில் வேலை செய்கிறார்கள் . அவர்களின் 90% மதிய உணவை அந்த உணவு விடுதியிலியேயே உண்பது வழக்கம்.
பணமோ, பொருளோ, புகழோ, அதிகாரமோ கூடும் இடத்தில, போட்டியும் உருவாவது சகஜம்தானே.?
நகரத்தில் உள்ள ஒரு பெரிய ஓட்டல் இந்த mansion இன் லாபத்தை மனதில் கொண்டு, அந்த தொழிற்சாலை ருக்கும் இடத்தில தானும் ஒரு ஓட்டல் திறக்க முனைகிறது.
பல வருடமாய் அந்த மேன்ஷனில் உணவு அருந்தி பழக்கப்பட்டவர்கள் தான் புதிதாக ஓட்டல் திறந்தால் வருவார்களா என்பது சந்தேகம்.
அதனால், இந்த தொழிற்லாளர்களில் ஒரு சிலரை சில ஆசை காட்டி அந்த மேன்ஷனின் உணவை குறை கூற செய்கிறது.
அந்த சிலர் அடிக்கடி உணவை பற்றி குறை கூறி சண்டையிட்டு வருகிறார்கள், இந்த புதிய ஓட்டல் திறந்ததும் அதற்க்கு சாப்பிட செல்கிறார்கள். இந்த சிலர் போல, உணவின் ருசியோ மற்ற எதோ சில விஷயங்கள் புடிக்கத்தவர்கள், அந்த சிலருடன் புதிய ஓட்டலுக்கு சாப்பிட சென்றுவிடுகிறார்கள்.
இதில் பகுத்தறிவு எங்கிருக்கிறது?
அடுத்தவர் சொல்லியோ, அல்லது தானாகவோ , துணிவாக, உணவின் ருசியை பற்றியோ அல்லது மற்ற ஒவ்வாத எதுவாக இருந்தாலும் கேள்வி கேட்பது.
இதில் பகுத்தறிவு அரசியல் எது தெரியுமா?
மேன்ஷனின் உணவின் ருசி புடிக்காமல், அல்லது வேறு சில விஷயங்களில் உடன்படிக்கை இல்லாமல், இந்த ஓட்டல் வேண்டாம் என்று முடிவு எடுத்து வேறு ஓட்டலுக்கு சாப்பிட போன பிறகு, மீண்டும் மீண்டும், அதே மேன்ஷன் வாசலில் வந்து நின்று கொண்டு,உணவில் உப்பு ஜாஸ்தியா இருக்கிறது, தோசை மாவு புளித்து போயிருக்கிறது, என்று தினமும் குறை கூறி கொண்டு இருப்பது.
புடிக்காததை கேள்வி கேட்டு துணிவாக எதிர்ப்பது, பகுத்தறிவு.
அனால் புடிக்காதென்று ஒதுக்கியோ, ஒதிங்கியோ வந்த பிறகும் அத்தையோ கிளறிக்கொண்டு இருப்பது கேவலம்.
அங்குதான் பகுத்தறிவை நாம் பகுத்தறிந்து பார்க்கவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அங்கத்தான் அதற்குள் அரசியல் வருகிறது. அங்குதான் பெரும்பலின்மை மக்களின் ஆதரவு கிட்டாமல் போய்விடுகிறது.
Note : என் சிறிய மூளைக்கு புரிந்த பகுத்தறிவு அரசியலை எழுதியிருக்கிறேன். தவறென்றால் என் புரிதலின்மைக்கு பகுத்தறிவை என் போன்ற சாமானியன் வரை எடுத்துக்கொண்டு வரமுடியாத பகுத்தறிவு அரசியல்வாதிகளையே குறை கூறவேண்டும்.